இவ்வளவு குற்றங்கள் நிகழ்ந்தும்கூட, அரசு ஏன் இதுவரை நிரந்தர டிஜிபியை நியமனம் செய்யவில்லை? இபிஎஸ் கேள்வி!
ADMK Edappadi Palaniswami condemn to DMK MK Stalin DGP
தமிழக சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: நிரந்தர டிஜிபி நியமனம் செய்யாதது ஏன்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திண்டிவனத்தில் காவலர் ஒருவரே மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, தமிழக சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்துக் கடுமையாக விமர்சித்து அவர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:
காவலர் அத்துமீறல்: "பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஒரு காவலரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது அதிர்ச்சியை அளிக்கிறது. தமிழ்நாட்டில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா என்று எண்ணும் அளவிற்குச் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து கிடக்கிறது."
பெண்களுக்குப் பாதுகாப்பில்லை: "போக்சோ வழக்குகளில் ரூ.104 கோடி நிவாரணம் அளித்திருப்பதாக அமைச்சர் கூறுகிறார். இது மாநிலத்தில் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாகிறது."
குற்றவாளி அச்சமின்மை: போதை ஆசாமிகளால் தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன. குற்றவாளிகளுக்குக் காவல்துறை மீது அச்சமில்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
நிரந்தர டிஜிபி நியமனம்: "மாநிலத்தில் இவ்வளவு குற்றங்கள் நிகழ்ந்தும்கூட, அரசு ஏன் இதுவரை நிரந்தர டிஜிபியை நியமனம் செய்யவில்லை? தங்களுக்கு வேண்டிய ஒருவரை டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. அரசு காலதாமதம் செய்கிறது," என்று குற்றம்சாட்டினார்.
English Summary
ADMK Edappadi Palaniswami condemn to DMK MK Stalin DGP