உங்கள் ஆட்சியின் லட்சணத்தை உங்கள் கட்சிக் காரர்களே சொல்வதைப் பாருங்கள் பொம்மை முதல்வரே! அதிமுக விமர்சனம்!
ADMK Condemn to DMK MK Stalin Udhay Melur murder
அதிமுக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "மேலூர் செக்கடி பஜார் பகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
மேலூர் பகுதியில் கொலைக் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், என்ன நடவடிக்கை எடுத்தது காவல்துறை?
மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில், காவல்துறையினர் அதிகம் இருக்கும் இடங்களிலேயே கொலைகள் நடப்பதற்கு என்ன விளக்கம் தரப்போகிறது பொம்மை முதல்வரின் அரசு?
"தனிப்பட்ட கொலை, முன் விரோதம், மது மற்றும் போதை பொருளால் நடந்தது" என Template சாக்கு போக்குகளை சொல்வது, கொலை நடப்பதை தடுத்து விடுமா?
உங்கள் ஆட்சியின் லட்சணத்தை உங்கள் கட்சிக் காரர்களே சமூக ஊடகத்தில் சொல்வதைப் பாருங்கள் பொம்மை முதல்வரே!

அந்த துரு பிடித்த இரும்புக்கரத்தை இப்போதாவது தேடும் ஐடியா இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

English Summary
ADMK Condemn to DMK MK Stalin Udhay Melur murder