அந்த "தம்பி" கைதாகும் போது, திமுக-வின் குடுமி சிக்கும்! CM ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன்? அதிமுக கேள்வி!
ADMK Condemn to DMK MK Stalin TASMAC Scam ED Raid
அதிமுகவின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பதிவில், "2-வது நாளாக தொடரும் ED ரெய்டுகள்! இன்னும் இந்த ரெய்டுகள் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன்?
தன் குடும்பத்தைச் சார்ந்தவர் வீட்டிலும், தனக்கு நெருக்கமானவர் வீட்டிலும் நடக்கும் இந்த ரெய்டு பற்றி ஏன் பேச மறுக்கிறார்?
ரத்தீஷ் எங்கே இருக்கிறார்? துபாய் சென்றுவிட்டதாக வரும் செய்திகள் உண்மையா? அப்படியென்றால், ரெய்டு வருமோ என்ற அச்சத்தில் தலைமறைவானாரா ரத்தீஷ்?
முதல்வராலும், அவரது மகனாலும் "தம்பி" என்று அன்போடு அழைக்கப்படும் ரத்தீஷின் "Job Description" என்ன?
யார் அந்த SIR என்று கேட்டோம்- பதில் வரவில்லை.
யார் அந்த தியாகி என்று கேட்டோம்... தமிழ்நாட்டிற்கே தெரிந்த பதில் என்றாலும் மு.க.ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.
இப்போது கேட்கிறோம் யார் அந்த தம்பி? எப்படி வந்தது இந்த தம்பிக்கு இவ்வளவு அதிகாரம்?
இந்த தம்பி கைதாகும் போது, தம்பியின் வசம் உள்ள திமுக-வின் குடுமி சிக்கும்! அப்போது பேசித் தானே ஆக வேண்டும் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்?" என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
English Summary
ADMK Condemn to DMK MK Stalin TASMAC Scam ED Raid