அரசு மருத்துவமனைக்குள்ளேயே புகுந்து படுகொலை செய்கிறார்கள்.. இனியும் இப்படிபட்ட ஆட்சி தொடர வேண்டுமா? அதிமுக கண்டனம்! - Seithipunal
Seithipunal


அதிமுக விடுத்துள்ள கண்டன செய்தியில், "தலைநகர் சென்னையில், நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள்ளேயே புகுந்து ஒரு கும்பல் படுகொலை செய்கிறது என்றால், விடியா திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா?

குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீது பயமில்லை, காவல்துறையின் மீது மரியாதையில்லை. இதற்கெல்லாம் ஒரே காரணம் நிர்வாகத் திறனற்ற ஒரு பொம்மை முதலமைச்சர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பதுதான்.

மருத்துவமனை என்பது உயிர் காக்கும் இடம். அங்கே கூட உயிரைப் பறிக்கும் கும்பல் சுதந்திரமாக உலா வருகிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

வீதிக்கு வீதி கொலை... தமிழகமெங்கும் ரவுடிகளின் ஆதிக்கம்! தன் துறையைக் கூடக் கட்டுப்படுத்த முடியாத ஒரு திறமையற்ற முதலமைச்சர் முக ஸ்டாலின்.

இனியும் இப்படிபட்ட ஆட்சி தொடர வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Condemn to DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->