"சாரிமா, இனி இதுபோல நடக்காது" என்று நாடகமாடிய CM ஸ்டாலின... உங்க வார்த்தைக்கு என்ன மதிப்பு? அதிமுக கண்டனம்! - Seithipunal
Seithipunal


அதிமுக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆகாஷ் என்ற இளைஞரின் மரணம், திமுக அரசின் கீழ் காவல்துறை எவ்வளவு அராஜகமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு மற்றுமொரு ரத்த சாட்சி!

காவல்துறையினர் துரத்தியபோது பாலத்தில் இருந்து குதித்து, மூச்சுத்திணறலால் ஆகாஷ் உயிரிழந்ததாக காவல்துறையினர் சொல்லும் கதைகளை எல்லாம் ஆகாஷின் உறவினர்கள் நம்பத் தயாராக இல்லை. 

திருப்புவனம் அஜித்குமார் லாக்-அப் மரணத்தின் போது, தொலைபேசியில் அஜித்குமாரின் பெற்றோரிடம் "சாரிமா, இனி இதுபோல நடக்காது" என்று நாடகமாடிய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களே... உங்கள் வார்த்தைக்கு என்ன மதிப்பு? மீண்டும் அதே சிவகங்கை மாவட்டத்தில் மற்றுமொரு உயிர் பறிக்கப்பட்டிருப்பது உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் உச்சம் இல்லையா?

உங்கள் ஆட்சியில் இதுவரை 25-க்கும் மேற்பட்ட காவல் மரணங்கள் அரங்கேறியும், இந்த விடியா அரசு எந்தப் பாடமும் கற்றதாகத் தெரியவில்லை. காவல்துறையைத் தன் வசம் வைத்துள்ள ஒரு முதலமைச்சர், தன் துறையையே கட்டுப்படுத்த முடியாமல் ஒரு "பொம்மை முதலமைச்சராக" வேடிக்கை பார்ப்பது தமிழகத்திற்கு நேர்ந்த சாபக்கேடு. 

ஆகாஷ் மரணத்தின் உண்மை பின்னணியை உடனடியாக வெளிப்படையான விசாரணைக்கு உட்படுத்தி, இளைஞரின் மரணத்திற்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் உயிர் காக்க வேண்டிய துறையே எமனாக மாறுவதை அஇஅதிமுக ஒருபோதும் வேடிக்கை பார்க்காது" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK condemn to DMK mk Stalin govt


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->