தங்களை தாங்களே மரணித்துக் கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு மனதளவில் காயப்படுத்துவது தான் ஸ்டாலின் மாடலா? அதிமுக கண்டனம்!
ADMK Condemn to DMK MK Stalin
அதிமுக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "தேர்தலின் போது விடியா திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதி எண் 311- ஐ நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 6 வது நாளாக போராடி வரும் பகுதிநேர ஆசிரியர்கள்.
அறவழியில் போராடும் ஆசிரியர்களின் போராட்டத்தை சீர்குலைக்கும் வழியில் போராட்டம் தொடங்கும் முன்னரே திமுக அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பல்வேறு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்ட ஆசிரியர்கள்.
அதில் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட ஆசிரியர் கண்ணன் என்பவர் வார்னிஷ் குடித்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற அதிர்ச்சி சம்பவம்.
போராட்டத்தை போர்க்களமாக மாற்றியதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்க்கையே மாய்த்துக் கொள்ளலாம் என்று நிலைக்கு தள்ளிய பொம்மை முதல்வர் முக ஸ்டாலின் இதற்கு என்ன பதிலளிக்க போகிறார்?
போராடுபவர்கள், தங்களை தாங்களே மரணித்துக் கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு மனதளவில் காயப்படுத்துவது தான் ஸ்டாலின் மாடலா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
ADMK Condemn to DMK MK Stalin