கடலூர்: மது போதையில் பள்ளி வாகனத்தை இயக்கி தந்தை, மகனை கொன்ற ஓட்டுநர்.. அதிமுக கண்டனம்! - Seithipunal
Seithipunal


அதிமுக விடுத்துள்ள கண்டன செய்தியில், "கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சியில் வசிக்கும் மதி என்பவரும், அவரது மகன் மனோஜ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் 22.12.2025 அன்று காலை கோணூர்-பெண்ணாடம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு தனியார் பள்ளி வேன் மோதி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துவிட்டனர். 

பள்ளி வேன் ஓட்டுநரை மருத்துவ பரிசோதனை செய்தபோது அவர் குடிபோதையில் இருந்ததாகவும், தனியார் பள்ளி வாகனத்திற்கு இன்சூரன்ஸ் மற்றும் வாகன தகுதிச் சான்றிதழும் புதுப்பிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தங்கள் பணியினை சரியாக செய்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது. எனவே இந்த விபத்திற்கு விடியா திமுக அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பேருந்துகளில் உள்ள தகுதிச் சான்றிதழ் மற்றும் இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்விபத்தில் தந்தை மகன் இருவரையும் இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலை வழங்குவதுடன், அரசு நிவாரணத் தொகையாக தலா 25 லட்சம் ரூபாயை வழங்க விடியா திமுக அரசை வலியுறுத்துகின்றோம்" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Condemn to DMk Govt pennadam school van accident


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->