முதல்வரின் கையாலாகாத்தனத்தை, திமுக அரசின் தவறுகளை பேசினால் வழக்கு- கைது- குண்டர் சட்டமா? அதிமுக கடும் கண்டனம்!
ADMK Condemn to DMK Govt MKStalin Savukku arrest
அதிமுக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "ஊடகங்கள், பத்திரிகைகள், சமூக வலைதளங்கள் என எல்லாவற்றிலும் தங்கள் குரல்கள், தங்கள் சார்பு ஊதுகுழல்கள் மட்டுமே நிரம்பி இருக்க வேண்டும் என்ற பாசிச எண்ணத்தில், தங்கள் ஆட்சிக்கு எதிரான உண்மைகளைப் பேசும் பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கைகளை ஏவும் ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு, பத்திரிகையாளர்கள்
வாராகி, பெலிக்ஸ் ஜெரால்டு, அரசியல் விமர்சகர்கள் வரதராஜன், கிஷோர் கே சாமி உள்ளிட்ட தங்களை தட்டிக் கேட்கும் பலரைத் தொடர்ந்து கைது செய்த நிலையில், தற்போது ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் அவர்களை முறையற்ற வகையில் , அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கடப்பாரைகளை கொண்டு கதவுகளை உடைத்து, வழக்கறிஞர்கள் வரும் வரை கூட காத்திராமல், கைது செய்யும் அளவிற்கு அவர் செய்த குற்றம் என்ன?
திமுக அரசின் தவறுகளை, பொம்மை முதல்வரின் கையாலாகாத்தனத்தை, தமிழ்நாட்டை ஒரு குடும்பத்தின் கொள்ளைக் காடாக இந்த விடியா அரசு மாற்றியிருப்பதை ஒரு பத்திரிக்ககையோ, ஊடகமோ தைரியமாக பேசினால், "வழக்கு- கைது- குண்டர் சட்டம்"- இது தான் இந்த அரசின் பதிலா?
பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் மீதான அராஜக அடக்குமுறைப் போக்கை முழுமையாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK Condemn to DMK Govt MKStalin Savukku arrest