ஸ்டெர்லைட்: வேதாந்தாவிற்கு சிகப்பு கம்பளம் விரிக்கத் தயாராகி விட்டதோ? அதிமுக தரப்பில் கடும் கண்டனம்! 
                                    
                                    
                                   ADMK Condemn to DMK Govt Madurai Vedantha factory 
 
                                 
                               
                                
                                      
                                            மதுரை மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தை திமுக அரசு அனுமதிக்க உள்ளதாக அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியை சேர்ந்த ராஜ் சத்யன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நுழைக்க அனுமதிப்பீர்களா திமுக?
அன்று எதிர்க்கட்சியாக கசந்த வேதாந்தா நிறுவனம், இன்று ஆளுங்கட்சியாக இனிக்குமா?
அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை உள்ளே வரக் காரணமாக இருந்தீர்கள். இன்று மதுரை மாவட்டத்தில் அதே வேதாந்தாவை நுழைக்க அனுமதிப்பீர்களா திமுக?
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு என்ற பெயரில் அன்று  அத்தனை விதமான சதிகளையும் செய்த இதே திமுக, இப்போது ஆட்சியில் இருக்கும் போது வேதாந்தாவிற்கு சிகப்பு கம்பளம் விரிக்கத் தயாராகி விட்டீர்கள் போல?
ஆட்சிக்கு முன்னும் பின்னும் எட்டுவழிச்சாலையில் மாற்றி மாற்றிப் பேசிய இரட்டை வேடதாரிகள், அதேபோல தானே இப்போதும் மாற்றிப் பேசப் போகிறார்கள்?
"தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு" என்று கிடைத்த மேடையிலெல்லாம் வோட்டு வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், இவர்களின் சதியால் ஏற்பட்ட மரணத்தில் அரசியல் செய்தவர்கள், இப்போது அடிக்கப்போகும் அந்தர் பல்டிகளை மக்கள் பார்க்கத் தான் போகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். 
  
                                     
                                 
                   
                       English Summary
                       ADMK Condemn to DMK Govt Madurai Vedantha factory