வாடகை வீட்டை காலி செய்வதில் தகராறு; போதையில் மனைவியை சரமாரிய வெட்டு; தடுத்த நபருக்கும் பலத்த காயம்..!
A husband was arrested for brutally attacking his wife with a knife during a fight over vacating a rented house
சென்னை வியாசர்பாடி, அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் 28 வயதான மணிமாறன். இவருக்கு மனைவி வினிதா மற்றும் 02 மகன்கள் உள்ளனர். கடந்த 03 மாதங்களாக தங்கள் இருக்கும் வாடகை வீட்டில் அடிக்கடி கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் இந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்கு செல்லலாம் என்று மனைவி வினிதா கணவனிடம் கூறிவந்துள்ளார். வந்துள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவ தினமான நேற்றிரவு மணிமாறன், வழக்கம் போல் மதுபோதையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரிடம் இந்த வீட்டில் இன்றும் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று மனைவி வினிதா கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்
தலைக்கு ஏறிய போதையால் மணிமாறன் ஆத்திரமாகி மனைவி வினிதாவை மீன் வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகன் (55) என்பவர் ஓடிவந்து தடுத்துள்ளார். இதில் அவருக்கும் தலையில் பலத்த வெட்டு விழுந்துள்ளது.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, மணிமாறனை மடக்கி பிடித்துள்ளனர். வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த வினிதா மற்றும் முருகன் ஆகிய 02 பேரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, எம்.கே.பி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவி மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் வெட்டிய மணிமாறனை இன்று காலை கைது செய்துள்ளனர்.
English Summary
A husband was arrested for brutally attacking his wife with a knife during a fight over vacating a rented house