திருச்சியில் 50,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு; இன்ஸ்பெக்டருக்கு 03 ஆண்டுகள், உதவியாளருக்கு 02 ஆண்டுகள் என சிறை தண்டனை..!
An inspector has been sentenced to 3 years in prison on charges of accepting a bribe of 50000 rupees
குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் இன்ஸ்பெக்டருக்கு 03 ஆண்டுகள் சிறையும், உதவியாளருக்கு 02 ஆண்டு சிறை என திருச்சி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாகை மாவட்டம் தலைஞாயிறு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்த 50 வயதுடைய சாமுவேல்ஞானம், கடந்த 2011-ஆம் ஆண்டு திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது வீரங்கிநல்லூரை சேர்ந்த துரைபாண்டியன் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதற்காக ரூ.50,000 லஞ்சமாக கேட்டுள்ளார்.
இது தொடர்பாக துரைபாண்டியன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்ததையடுத்து,போலீசார் ஆலோசனை பேரில் கடந்த 24.11.2011 துரைபாண்டியன், லஞ்சப்பணம் ரூ.50 ஆயிரத்தை இன்ஸ்பெக்டரின் உதவியாளர் சதீஷ் (48) மூலம் சாமுவேல்ஞானத்திடம் கொடுத்துள்ளார்.
அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார்இருவரையும் கைது செய்தனர். குறித்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிவுற்று, நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதி, புவியரசு தீர்ப்பின் படி, இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானத்துக்கு 03 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, அபராதம் கட்டத்த வறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், உதவியாளர் சதீசுருக்கு 02 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.05 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால், மேலும் 03 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து சாமுவேல்ஞானம், சதீசை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.
English Summary
An inspector has been sentenced to 3 years in prison on charges of accepting a bribe of 50000 rupees