கூப்பன்: மகளிரை ஏமாற்ற “விஞ்ஞான ஊழலை” கையில் எடுத்துள்ளது திமுக.. ஏமாந்து விடாதீர் - அதிமுக விமர்சனம்!
ADMK CONDEMN TO DMK FOR MANIFESTO SCAM
அதிமுக விடுத்துள்ள செய்தியில், "இன்று தான் முட்டாள்கள் தினம். ஆனால் திமுக-வோ, மார்ச் 29 அன்றே மக்களை முட்டாள் ஆக ஆக்க நினைத்து தனது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுவிட்டது.
மக்களை ஏமாற்ற எப்படி டிசைன் டிசைனாக உருட்டியிருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா?
ஆண்ட ஐந்து வருடத்தில் இரண்டு லட்சம் பம்பு செட்டுகள் கூட முழுதாக கொடுக்க முடியாத இந்த
அல்வா அரசு,
விவசாயிகளை ஏமாற்ற “இருபது லட்சம் இலவச பம்ப் செட்கள்” என்ற உருட்டு வாக்குறுதி அறிவிப்பு அளித்துள்ளார்கள்,
நிர்வாகம் என்றால் முன்ன பின்ன எதாவது தெரிந்தால் தானே திரு. ஸ்டாலின் இதைப்பற்றி எல்லாம் யோசிப்பார்?
யாரோ எழுதிக் கொடுப்பதை அப்படியே “ஆக…” என வாசிக்கும் பொம்மையாக இருக்கும் இவர்களுக்கெல்லாம் விவசாயம் பற்றி, மின் மேலாண்மை பற்றி என்ன தெரியும்?
அடுத்து, இளைஞர்களை ஏமாற்ற, 1.5 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற உருட்டு.
ஏற்கனவே நீங்கள் அரசுப்பணிகளை நிரப்பிய லட்சணத்தை, #TNPSCGroup2 தேர்வு கூட நடத்த வக்கற்ற திமுக அரசு என்ற உண்மையை தமிழ்நாடே அறிந்த பின்பும், இப்படி ஒரு பொய்யை சொல்லி ஏமாற்ற திமுக-விற்கு வெட்கமாக இல்லையா?
Next, தொழில்துறையினரை ஏமாற்ற, 18 லட்சம் கோடி ரூபாய் அந்நிய முதலீடு, 120 பில்லியன் டாலர் பொருளாதாரம் என Statistical உருட்டுகள்.
அதாவது இதுவரை வெளிநாடு இன்பச் சுற்றுலா சென்றதெல்லாம் போதாதாம். இன்னும் பல நாடுகளை சுற்றிப் பார்க்க வேண்டுமாம்.
எங்கே சென்றாலும் உள்ளூர் நிறுவனத்தோடு தான் ஒப்பந்தம் போடப் போகிறீர்கள்… பிறகு எதற்கு இந்த ஏமாற்று வேலை?
மிகவும் Highlight-ஆக, தமிழக மகளிரை ஏமாற்ற தனது வரலாற்றுப் புகழ் “விஞ்ஞான ஊழலை” கையில் எடுத்துள்ளது திமுக.
கூப்பன் தருகிறார்களாம்.
திமுக கட்சியினர் கமிஷன் கொள்ளை அடிக்க தமிழக மகளிரை ஏமாற்றிப் பிழைக்க வேண்டுமா?
கூப்பன் என்றாலே Terms and Conditions Apply தானே? மக்கள் பணத்தை மக்கள் பெறுவதற்கு நீங்கள் யார் கண்டிஷன் போடுவதற்கு?
எங்கள் தேர்தல் அறிக்கையில், ரூ. 10,000 நேரடியாக வங்கிக் கணக்கில் சேரும் எனவும், அரிசி கார்டுகளுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக விலையில்லா Fridge வழங்கப்படும் என நேர்மையாக அறிவித்துள்ளோம்.
சமூகநலத் திட்டங்கள் என்பது எல்லோருக்கும் நேரடியாக சேர வேண்டும் என்ற கொள்கையோடு அறிவித்துள்ளோம் நாங்கள்.
மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வெறும் பொய்களை அள்ளி வீசியுள்ளது திமுக.
தமிழக மக்களே- 5 ஆண்டுகள் நீங்கள் ஏமாந்தது போதும்!
உங்களை மீண்டும் ஏமாற்ற நினைக்கும் ஸ்டாலினுக்கும், அவரின் திமுக-விற்கும், அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஏமாற்றத்தை அளிக்க நீங்கள் தயாரா ?
மறந்துவிடாதீர்… ஏப்ரல் 23!
English Summary
ADMK CONDEMN TO DMK FOR MANIFESTO SCAM