ஜப்பானில் 5.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்களை அதிர்ந்ததால் பீதியடைந்த மக்கள்..! - Seithipunal
Seithipunal


ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ரிக்டர் அளவுகோலில் 5.0 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள  கட்டடங்கள் அதிர்ந்து பீதியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

குறித்த நிலநடுக்கம் ஜப்பானின் கிழக்கு இபராகி மாகாணத்தில் பதிவாயுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள மத்தியப் பகுதிகளிலும் பலமாக உணரப்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 50 கிலோமீட்டர் (31 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இச்சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது குறிப்பிடத்தக்க அளவிலான சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாகத் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. குறிப்பாக, இபராகி மாகாணத்தில் அமைந்துள்ள டோக்காய் எண். 2 அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு எவ்வித அசாதாரண சூழலும் ஏற்படவில்லை என்பதும், அணு உலைகள் பாதுகாப்பாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today Powerful Earthquake Strikes Japan


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->