கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளில் 94 சதவீதத்தை இந்தத் தேர்தலில் தக்கவைத்துக் கொண்டுள்ள அதிமுக..! - Seithipunal
Seithipunal


2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் 94 சதவீதத்தை இந்தத் தேர்தலில் அக்கட்சி தக்கவைத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக வடக்கு மாவட்டங்களில் 47 தொகுதிகளை அதிமுக பெற்றுள்ளது. இதில் முந்தைய தேர்தலில் 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. அதன்படி, இந்த முறை 11 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்துள்ளது. அதில் கடந்த முறை அதிமுக ஒரேயொரு தொகுதியை மட்டுமே வென்றிருந்தது.

கடந்த தேர்தலில் காவிரிப் படுகை மாவட்டங்களில் ஏற்கெனவே வென்றிருந்த 04 தொகுதிகள் உட்பட 28 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அங்கு கூட்டணிக் கட்சிகளுக்கு 08 தொகுதிகளை அதிமுக கொடுத்துள்ளது. அதில் அதிமுக வென்ற தொகுதி என்று எதுவும் கிடையாது. அந்தவகையில் மேற்கு மாவட்டங்களில் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்ற 32 தொகுதிகள் உட்பட 41 தொகுதிகளில் அதிமுக இந்த முறை போட்டியிட உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தங்கள் வசம் ஏற்கெனவே, இருந்த 03 தொகுதிகள் உட்பட 07 தொகுதிகளை கொடுத்துள்ளது.

அதேப்போன்று, தென் மாவட்டங்களில் ஏற்கெனவே வெற்றி பெற்றிருந்த 16 தொகுதிகள் உட்பட 36 தொகுதிகளில் அதிமுக இந்த முறை போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் அதிமுக வெற்றியை பார்க்காத 14 தொகுதிகள் இந்த முறை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த முறை ஒதுக்கப்பட்டுள்ள 39 தொகுதிகளில் 04 தொகுதிகளில் மட்டுமே முந்தைய தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK has retained 94 percent of the constituencies it won in the previous Assembly elections


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->