'எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வாக்காளர்கள் விரும்பவில்லை; அதுவே எனக்கு வெற்றியை தந்து விடும்'; கருணாஸ் நம்பிக்கை..! - Seithipunal
Seithipunal


முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிவகங்கை தொகுதி வேட்பாளர் நடிகர் கருணாஸ்.

இவர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது; திமுக தேர்தல் அறிக்கைக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகள், மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள தேர்தல் அறிக்கையாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிவகங்கை தொகுதிக்கு என்னை வேட்பாளராக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த உடனே, தொகுதி முழுவதும் பாஸிட்டிவான அலை ஏற்பட்டுள்ளது என்றும், திராவிட மாடல் ஆட்சியின் கடந்த 05 ஆண்டுகால திட்டங்கள், சாதனைகள், தற்போதைய தேர்தல் அறிக்கையை பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை தேர்தல் வேலையை பம்பரமாக சுழன்று பார்த்து வருகின்றனர். எடப்பாடியை முதல்வராக்க வாக்காளர்கள் விரும்பவில்லை. அதுவே எனக்கு வெற்றியை தந்து விடும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல, பாஜக-அதிமுக கூட்டணி தமிழகம், தமிழர் நலனுக்கு எதிரானது என்றும், அதிமுகவை சிதைத்து விட்டனர். எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதா வளர்த்த இரட்டை இலையில், ஒரு இலை அமித்ஷாவிடம், ஒரு இலை எடப்பாடியிடம் உள்ளது என்று விமர்சித்துள்ளார். அத்துடன், மதவாதக் கூட்டணியை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழக மக்கள் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karunas says that voters did not wish to make Edappadi the Chief Minister


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->