பாஜகவுக்கு இத்தனை தொகுதிகளா.! அமித் ஷா முன்னிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் போட்ட புதிய கணக்கு.! வெளியான பரபரப்பு தகவல்.!  - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று சென்னை வந்தார். நேற்று, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட அமித் ஷா, பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்கத்திற்கான அடிக்கல் நாட்டினார்.

இந்த அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் தங்கியிருக்கும் தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்றனர். அவர்களுடன் தேர்தல் தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் உள்பட முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமித் ஷா ஆகியோர் சந்தித்து பேசிய போது, தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்துள்ளதாகவும், இதில் பாஜக 40 தொகுதிகள் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், பாஜகவின் இந்த கோரிக்கையை மறுத்து, 25 தொகுதிகள் ஒதுக்க அதிமுக விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுக்கான தொகுதிகள் பேசி முடிவு செய்துவிட்டு, அதன்பின்னர் பாஜகவுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்று ஓபிஎஸ்-இபிஎஸ் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk bjp alliance some info


கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
Seithipunal