நாளை தமிழகம் வரும் அமித்ஷா! அதிமுக பாஜக கூட்டணியில் இணையும் கட்சிகள்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் எட்டு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் திமுக தீவிர தேர்தல் பிரசாத்தை தொடங்கியுள்ளது.

அதேசமயம், அதிமுகவும் கூட்டணியும் மீண்டும் ஆட்சியை பிடிக்க பல யுகங்களை வகுத்து களமிறங்கியுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும் நோக்கில் காய் நகர்த்தி வருகிறது.

முக்கியமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் பாஜக வலிமையை உயர்த்த பல்வேறு அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார்.

அதிமுக-பாஜக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதனுடன், கட்சியை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. அதற்கான பகுதியாக மாநிலம் முழுவதும் ஏழு இடங்களில் பூத் கமிட்டி மண்டல மாநாடுகள் நடத்தப்படுகின்றன.

அவற்றில் முதலாவது மாநாடு நெல்லையில் நடைபெறுகிறது. இதில் அமித்ஷா பங்கேற்று உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 5 பாராளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 28 சட்டமன்றத் தொகுதிகளின் 8,500க்கும் மேற்பட்ட பூத் கமிட்டிகளிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

அமித்ஷா நாளை மதியம் தூத்துக்குடி விமான நிலையம் வந்திறங்கி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இறங்குகிறார். பின்னர், மாநாட்டில் கலந்து கொண்டு கட்சி தொண்டர்களிடம் உரையாற்றுகிறார்.

அவர், பாஜக அரசு தமிழகத்துக்காக மேற்கொண்ட பல்வேறு திட்டங்கள், மக்களுக்கான நலப் பணிகள் குறித்து விளக்கி, அவற்றை வாக்காளர்களிடம் கொண்டு செல்லும் வழிமுறைகளை நிர்வாகிகளுக்கு அறிவிக்க உள்ளார்.

மேலும், ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது 50 சதவீத வாக்குகளை பெறும் நோக்கில் கட்சியினர் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமித்ஷாவின் வருகையால் பாஜக தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், அதிமுக-பாஜக கூட்டணியில் இணையும் காட்சிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் நாளை வெளியாகலாம் என்று யஎதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டை முன்னிட்டு நெல்லை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK BJP Alliance Amitsha TN Visit


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->