மாநாடு ஒருபக்கம் நடக்க, டாஸ்மாக் கடைகளை நோக்கிய TVK தொண்டர்கள்!
TVK vijay Conference liquor shop
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெறுகிறது.
இதனால் சுற்றுப்புறப் பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால், மாணவர்கள் சிரமப்படாமல் வீடு திரும்ப பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக எலியார்பத்தி, வலையங்குளம், காரியாபட்டி பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள் முற்பகலே முடிக்கப்பட்டன.
மாநாட்டுக்காக ஆயிரக்கணக்கான வாகனங்கள் மதுரை மாநகரம் முழுவதும் நெரிசலை ஏற்படுத்தியுள்ளன. அவசர வழித்தடங்களிலும் தொண்டர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் நிலைமை மேலும் சிக்கலானது.
மாநாட்டு திடலில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் பேர் இருந்தபோதிலும், இன்னும் பலர் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.
English Summary
TVK vijay Conference liquor shop