தவெக கொடியுடன் பனை மரத்தில் ஏறிய தொண்டர்.!!
tvk fan climbed palm tree with flag
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது.
முதலில் விஜய் பாடல்களின் தொகுப்பு ஒலிப்பரப்பு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து "உங்கள் விஜய், உங்கள் விஜய் உயிரென வரேன் நா" என்று தொடங்கும் விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடல் ஒலிக்கப்பட்டது.
இதையடுத்து தவெக தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அங்கு அவருக்கு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து விஜய் அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் ரேம்ப் வாக் செய்து தொண்டர்களை சந்தித்தார்.
இது ஒரு புறம் இருக்க, மதுரை மாநாட்டில் சில பரபரப்பான சம்பவங்களும் நடைபெறுகின்றன. அதில் ஒன்றாக, மாநாட்டிற்கு வந்த தொண்டர் ஒருவர் த.வெ.க. கொடியுடன் பனை மரத்தில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
tvk fan climbed palm tree with flag