டயலாக் பேசுனா போதுமா... அறியாமையில்... விஜயை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!
ADMK Edappadi palanisami TVK vijay Political stunt
மதுரையில் நடைபெற்ற தவெக மாநில மாநாட்டில் தலைவர் விஜய் ஆற்றிய உரையில், “எம்ஜிஆர் வாழ்ந்த காலத்தில் யாராலும் முதலமைச்சர் பதவியை கனவிலும் நினைக்க முடியவில்லை. எதிரிகளையும் கெஞ்ச வைத்தவர். ஆனால் இன்று அவர் உருவாக்கிய கட்சி எந்த நிலையில் உள்ளது? அப்பாவி தொண்டர்கள் வேதனையை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள். 2026 தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்களும், தொண்டர்களும் நன்றாகவே அறிவார்கள். அதனால் பாஜக என்ன வேஷம் போட்டாலும் தமிழ்நாட்டில் அவர்களுக்கு இடமில்லை” என்று அவர் கூறினார்.
இந்நிலையில், விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய எடப்பாடி பழனிசாமி. “அதிமுக யார் கையில் இருக்கிறது என்று சிலர் அறியாமையில் பேசுகிறார்கள்"என்றார் .
மேலும், "ஒரு இயக்கம் ஒரு மரம் போலது. முதலில் நடக்க, தண்ணீர் ஊற்ற, பராமரிக்க, பல ஆண்டுகள் உழைக்க வேண்டும். பின்னரே அது கனி தரும்.
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உழைப்பின் மூலம் தான் மக்கள் நம்பிக்கையை பெற்று முதலமைச்சரானார்கள். அண்ணாவும் போராட்டங்களை சந்தித்து, சிறை சென்ற பிறகே மக்களிடம் மதிப்பைப் பெற்றார்.
அதிமுக அப்படி உழைப்பின் அடிப்படையில் வளர்ந்த இயக்கம். அதை அறியாமல் சிலர் பேசுகிறார்கள்” என்றார்.
மேலும், “கட்சி ஆரம்பித்த உடனே பெரிய சாதனைகள் செய்தது போல சிலர் டயலாக் பேசுகிறார்கள். ஆனால் மக்களிடம் செல்வாக்கு கிடைக்க உழைப்பு அவசியம். எனது அரசியல் வாழ்க்கை 51 ஆண்டுகள். உழைப்பில்லாமல் பலனை எதிர்பார்ப்பது நிலைக்காது” என விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார்.
English Summary
ADMK Edappadi palanisami TVK vijay Political stunt