நடிகை வித்தியா மாரடைப்பால் மரணமா.? அதிமுகவின் முக்கிய புள்ளி வெளியிட்ட போஸ்டர்.!!
actress vindhya poster
தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் அனைத்தும் வருகின்ற மே இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகருமான விந்தியா அதிமுகவுக்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.
பிரச்சாரத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால், யாரோ நடிகை விந்தியா மாரடைப்பால் இறந்துவிட்டதாக சொல்லி சிலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகை விந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில், உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா என பதிவிட்டுள்ளார்.