அதிரடி கருத்து! வருகிற 2026ல் தி.மு.க. ஆட்சியே தமிழகத்தின் சிறப்பான பாதுகாப்பு...! -சத்யராஜ் - Seithipunal
Seithipunal


திருப்பூரில் “மதத்தால் பிரிந்தாலும் மனதால் இணைவோம்” என்ற பெயரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு உரையாற்றினார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"மனிதன் நல்ல வாழ்வு வாழ வேண்டுமென்றால் விஞ்ஞானத்தைப் பயன்படுத்த வேண்டும். மதத்தின் பெயரில் சண்டை போட்டால் சமூகமே சிதைந்து போகும்.

உண்மையில் மத நல்லிணக்கம்தான் சமூகத்தின் உயிர்நாடி. ஆனால், இன்று குரங்கையும் விட மோசமான குணத்துடன் மனிதன் நடந்து கொள்கிறான்.நான் பள்ளியில் இருந்த காலத்தில் இப்படி மத, சாதி பிரச்சினைகள் தெரியவே தெரியாது. ஆனால் பெரியார் சிந்தனைகளை, அவருடைய நூல்களைப் படித்த பிறகுதான் ‘கடவுள் என்ற ஒன்று மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பனை’ என புரிந்தது.

திருப்பூர் இன்று உலகளாவிய வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. ஆனால், அமெரிக்காவில் இருந்து ஒருவர் திடீரென தடையை விதித்தால், வடமாநில இளைஞர்களிடம் ‘உங்கள் ஊருக்கு போகிறீர்களா?’ என்று கேட்டால், அவர்கள் கோபப்படுவார்கள். ஏனெனில், அவர்கள் இங்கே வாழ்வாதாரம் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள்.

மேலும், மும்பையில் ‘பீப் ஸ்டால்’ கூட இல்லை. அங்கே நிலவும் கடுமையான கட்டுப்பாடுகள் சாதாரணமல்ல. மகாராஷ்டிராவில் மராட்டி மொழியே ஆட்சி செய்கிறது. அங்கேயும் இந்தி எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உண்மையில் இந்தியாவிற்கு முன்மாதிரி மாநிலம் என்றால் அது தமிழ்நாட்டுதான்.2026-ல் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும்; அப்போதுதான் தமிழகத்திற்கு உண்மையான பாதுகாப்பு கிடைக்கும்.

வடமாநிலங்களில் இன்னும் பெண்ணடிமை, சாதிய சண்டைகள் தொடர்ந்தாலும், தமிழ்நாட்டின் சிந்தனைகள்தான் இன்று நாடு முழுவதும் பரவி வருகிறது.எனக்கு சினிமாவில் சந்தை உள்ளது, பணமும் இருக்கிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் எனக்கு தனிப்பட்ட பிரச்சினை இல்லை. ஆனால், தமிழ்நாட்டின் பாதுகாப்பிற்கும் சமூக நீதிக்குமான உறுதியான ஆட்சி அமைவதற்கு தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Action packed comment DMK rule 2026 best security Tamil Nadu Sathyaraj


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->