வக்ஃப் சட்ட திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் மூன்றாவது மனு தாக்கல்!
AAP case file against Waqf BILL
1995 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் நோக்கில், புதிய மசோதா நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகள் உள்ளபோதும் நிறைவேற்றப்பட்டது.
இதில், முஸ்லிமல்லாதவர்கள் வக்ஃப் வாரியங்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது, மற்றும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றும் நபர்களுக்கு மட்டுமே வக்ஃப் சொத்துகளை அற்பணிக்க அனுமதிக்கும் விதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த மசோதா அரசமைப்புக்கு முரணானது எனக் கூறி, காங்கிரஸின் முகமது ஜாவத், மஜ்லிஸ் கட்சியின் அஸாதுதீன் ஒவைஸி ஆகியோர் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், ஆம் ஆத்மியின் அமனத்துல்லா கான் எம்.எல்.ஏ. மூன்றாவது மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், இந்த திருத்தம் முஸ்லிம்களின் மத, கலாசார தன்னாட்சியை மீறுவதாகவும், மத அடிப்படையிலான தொண்டு நிறுவனங்களின் உரிமைகளில் அரசாங்கம் தலையிடும் விதமாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், "வக்ஃப் சட்டம் 1995" என்ற பெயரை மாற்றியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேல்முறையீடும் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
AAP case file against Waqf BILL