Big Breaking: விஜய்யின் கரூர் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் உயிரிழப்பு..? அதிகாலை கரூர் செல்லும் முதல்வர்..!
33 people died in Vijay Karur campaign stampede
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நாமக்கல் பிரச்சாரத்தை தொடர்ந்து, இன்றிரவு 07 மணியளவில் கரூர் மாவட்டத்தில்பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு விஜய் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியத்தில்,பலர் மயக்கமடைந்து விழுந்தனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் முதற்கட்டமாக 02 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 02-வது கட்டமாக ஒரு பெண், 03 குழந்தைகள் உட்பட 10 உயிரிழந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதனையடுத்து மருத்துவமனையில் மயக்கம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், கரூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 03-வது கட்டமாக இந்த் கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 12 பேர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கரூரில் நிலவு வரும் அசாதாரண சூழல் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அதிகாலை கரூர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் வீரச்சார கூட்டத்தில் இவ்வாறான துயர சம்பவம் ஏற்பட்டுள்ளமை ஒட்டு மொத்த அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
33 people died in Vijay Karur campaign stampede