தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. 3 அமைச்சர்கள்.. வெளியான அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சரவையில் ஒரு சில இலாக்காக்களை நிர்வாக ரீதியாக வேறு அமைச்சர்களுக்கு மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அரசாணையில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு-விடமிருந்து சர்க்கரை ஆலைகள் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்எஸ் ராஜகண்ணப்பாவிடம் இருந்த விமான போக்குவரத்து, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னரசுவிடம் வழங்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் வசமிருந்த வசமிருந்த அயலக பணியாளர் கழகமானது, சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் 116 பிரிவு 3ன் படி, மாநில அரசின் அலுவல்கள், மேலும் சிறப்பாக நடைபெறுவதற்கு அலுவலர்களை அமைச்சர்களுக்கு இடையே பகிர்ந்து கொள்வதற்காக ஆளுநர் விதிகளை வகுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற்றுள்ள மாற்றம், நிர்வாக ரீதியான மாற்றம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே அரசியல் ரீதியான காரணம் எதுவுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 change for tn cabinet


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->