பெண்களே அதிகம்: தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் அர்ச்சனா பட்நாயக்! - Seithipunal
Seithipunal


தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 2003-ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் ஒருமுறை மேற்கொள்ளப்பட்ட 'சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளின்' (SSR) முடிவில், தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை மாநிலத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டார்.

பெரிய அளவிலான நீக்கம்: கடந்த அக்டோபர் நிலவரப்படி 6.41 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கையில், போலி மற்றும் முகவரி மாறிய சுமார் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.

பொதுமக்கள் பங்களிப்பு: டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 10 வரை வழங்கப்பட்ட அவகாசத்தில், பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேர் உள்ளிட்ட மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் விண்ணப்பப் படிவங்களை வழங்கியிருந்தனர்.

இறுதிப் புள்ளிவிவரங்கள்:

மொத்த வாக்காளர்கள் - 5,67,07,380
பெண் வாக்காளர்கள் - 2,89,60,838
ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925
மூன்றாம் பாலினத்தவர் - 7,617

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் இப்போதும் புதிதாக விண்ணப்பிக்கலாம் எனத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உறுதி அளித்துள்ளார்.

வரைவுப் பட்டியலில் விடுபட்ட 17 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட பிறகும், பெண்களே தமிழகத்தின் 'பெரும்பான்மை' வாக்காளர்களாகத் தொடர்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2026 Election Prep TNs Final Voter List with 5 Crore Electors


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->