2026 தேர்தல் கூட்டணி வியூகம் தீவிரம்! 80 இல்லனா 60..ஒத்துவராத இபிஎஸ்!மாஸ்டர் மைண்டை தமிழ்நாட்டிற்கு அனுப்பிய அமித் ஷா!
2026 election alliance strategy in earnest 80 or 60 inconsistent EPS Amit Shah sent the mastermind to Tamil Nadu
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வர உள்ளார். தமிழக சட்டமன்ற பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ் கோயல், இன்று இரவு அல்லது நாளை காலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முக்கிய ஆலோசனைகளை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவது, கூட்டணி விரிவாக்கம், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் முக்கியமாக பேசப்படும் என கூறப்படுகிறது.
பாஜக சார்பில் தமிழ்நாட்டில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பியூஷ் கோயல் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அதிமுகவிடம் இருந்து சுமார் 65 தொகுதிகளை பாஜக கோர உள்ளதாகவும், இதற்கான அழுத்தத்தை அதிமுக மீது செலுத்தும் முக்கிய பொறுப்பு பியூஷ் கோயலிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதிமுக கூட்டணிக்குள் அமமுக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உள்ளிட்டவர்களை இணைப்பதற்கான முயற்சிகளையும் அவர் முன்னெடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
திராவிடக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் தமிழ்நாட்டில், அதிமுக–பாஜக கூட்டணி உடையாமல் நீடிக்க வேண்டும் என்பதே மத்திய பாஜக தலைமையின் முக்கிய இலக்காக இருப்பதாகவும், ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி–பாஜக கூட்டணி போல, தமிழ்நாட்டிலும் அதிமுக மூத்த பங்காளியாகவும் பாஜக இளைய பங்காளியாகவும் செயல்படும் மாடலை உருவாக்க பியூஷ் கோயல் காய்களை நகர்த்துவார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில், திமுகவை விட அதிமுக மீதுதான் பியூஷ் கோயலின் அரசியல் அழுத்தம் அதிகமாக இருக்கும் என தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
English Summary
2026 election alliance strategy in earnest 80 or 60 inconsistent EPS Amit Shah sent the mastermind to Tamil Nadu