தவெக - அதிமுக கூட்டணியில் 20226 தேர்தல்?...எடப்பாடி பழனிசாமி OPEN TALK! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாருமான எடப்பாடி பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் என்னை கொச்சைப்படுத்தி  விமர்சனம் செய்கிறார். என்றும், தவறாக விமர்சனம் செய்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறினார்.  அதிமுகவை பொறுத்தவரையில் எந்த எதிர்க்கட்சியினரையும் தவறுதலாக பேசியதில்லை என்றும், தங்களை பேசினால் தக்க பதிலடி தருவோம் என்று தெரிவித்தார்.

மேலும், 6 இடங்களில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான் என்றும்,  அதிமுக ஆட்சியில் 85 சதவீதம் நிறைவடைந்த அத்திக்கடவு-அவிநாசி பணி திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்படுள்ளதாக குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் கூட்டணி அமையுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டு உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் தான் இது குறித்து கூற முடியும் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20226 election in tvk aiadmk alliance edappadi palaniswami open talk


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->