15 கோடி கணக்கில் இல்லை? நடிகர் விஜய் வழக்கில் உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு இன்று...! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயைச் சுற்றி வருமான வரி வழக்கு மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 2015-ஆம் ஆண்டு அவரது வீடும் அலுவலகமும் வருமான வரித்துறை அதிகாரிகளால் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது, பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் 2015–2016 நிதியாண்டிற்கான வருமானமாக ரூ.35.42 கோடி என விஜய் கணக்கில் காட்டியிருந்தாலும், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் அதில் முரண்பாடுகளை கண்டறிந்தனர்.

குறிப்பாக ‘புலி’ திரைப்படத்தில் நடித்ததற்காக பெற்றதாக தெரிவிக்கப்படும்  ரூ.15 கோடி வருமானம் கணக்கில் சேர்க்கப்படாதது வெளிச்சத்துக்கு வந்தது. வருமானத்தை மறைத்ததாகக் கூறி, அவருக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து

2022 ஜூன் 30-ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட, அபராத உத்தரவுக்கு இடைக்கால தடை வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த இறுதிக்கட்ட விசாரணையில் அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தீர்ப்பை ஒத்திவைத்து வைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய தீர்ப்பு இன்று வெளியாக உள்ளதால், திரையுலகிலும் சட்டவட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

15 crores not accounted High Court important verdict actor Vijay case today


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->