144 தடை போதுமானதல்ல! முதல்வருக்கு போன் செய்த டாக்டர் ராமதாஸ்! எதிர்பார்க்கப்படும் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தொலைபேசியில் பேசியுள்ளார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை வைத்துள்ளார் என பா.ம.க தலைமை நிலைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செய்திக்குறிப்பில், "தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று மாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் வரவேற்பு தெரிவித்தார். அதேநேரத்தில், கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு பதிலாக 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பது போதுமானதல்ல என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம்  மருத்துவர் அய்யா அவர்கள் கூறினார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அது மக்களிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எந்தெந்த வழிகளில் எல்லாம் உதவியாக இருக்கும் என்பதையும் விரிவாக விளக்கிக் கூறினார்.

 மருத்துவர் அய்யா அவர்கள் தெரிவித்த கருத்துகளை முதலமைச்சர் அவர்கள் மிகுந்த அக்கறையுடன் கேட்டுக் கொண்டார். அவற்றை ஆய்வு செய்து முடிவெடுப்பதாகவும் உறுதியளித்தார்" என கூறப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

144 not enough, dr ramadoss called CM Palanisamy


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal