பதவியை ராஜினாமா செய்து புதிய கட்சி தொடங்கிய 13 கவுன்சிலர்கள்; அதிர்ச்சியில் ஆம் ஆத்மி..! - Seithipunal
Seithipunal


டில்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 13 கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த சம்பவம் அக்கட்சியின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், முகேஷ் கோயல் தலைமையில் அவர்கள் புதிய கட்சியை தொடங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி படும் தோல்வியை சந்தித்தது. பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்தத் தோல்வியை ஜீரணித்துக் கொள்ள முடியாத ஆம் ஆத்மி கட்சியினரிடையே உட்கட்சி பூசல் நிலவி வந்தது. 

இந்நிலையில், நடைபெற இருக்கும் டில்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. இந்த சூழலில், ஆம் ஆத்மியிதோடு, முகேஷ் கோயல் தலைமையில் இந்திய பிரஸ்தா விகாஷ் என்ற புதிய கட்சியையும் தொடங்குவதாக அறிவித்துள்ளனர். இது ஆம் ஆத்மி கட்சியின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு மாநகராட்சி தேர்தலின் போது, முகேஷ் கோயல் உள்பட 13 கவுன்சிலர்களும் காங்கிரஸில் இருந்து விலகி, ஆம்ஆத்மியில் இணைந்தனர். தற்போது, ஆம் ஆத்மியில் இருந்து இவர்கள் விலகியுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக முகேஷ் கோயல் மாநகராட்சி கவுன்சிலராக இருந்து வந்துள்ளார்.

கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்த ஹிமானி ஜெயின் கூறுகையில், 'நாங்கள் அதிகாரத்தில் இருந்த போதும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக எந்தப் பணிகளும் நடக்கவில்லை. நாங்கள் தற்போது புதிய கட்சியை தொடங்கியுள்ளோம். டில்லியின் வளர்ச்சியை கொள்கையாக வைத்து இந்தக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது,' என்று குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக ஆத் ஆத்மி கட்சி பெரிய பின்னடைவை சந்திக்கும் என கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

13 councilors resign from Aam Aadmi Party and start a new party


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->