கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்குது உங்களுக்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


பொதுவாக நாம் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் அழிவுகரமான மற்றும் அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். எந்தவொரு கேஸ் சிலிண்டர்களும் தானாக வெடிப்பது கிடையாது அதனை நாம் தவறான முறையில் பயன்படுத்துவதினால் தான் வெடிக்கிறது.

கேஸ் சிலிண்டர் அல்லது ரெகுலேட்டரில் கேஸ் கசியும் பிரச்சனை இருந்தால் வாயு காற்றுடன் கலந்து எளிதில் தீ பற்றக்கூடிய கலவையாக மாறுகிறது. இத்தகைய கலவை தீப்பிழம்பாக மாற சிறிய தீப்பொறி அல்லது தீ பற்ற வைக்கும் மூலங்கள் தேவைப்படுகிறது. தீப்பொறி வாயு கலவையுடன் கலந்ததும், வாயு கலவையை எரியூட்டி வெடி விபத்து நிகழ்கிறது. இத்தகைய கேஸ் சிலிண்டர் வெடிப்பு பொதுவாக மக்கள் விழிப்புணர்வுடன் இல்லாமல் இருப்பதினால் ஏற்படுகிறது.

ஒரு கேஸ் சிலிண்டரானது ஒரு சதுர சென்டி மீட்டருக்கு 25 கிலோ வரையிலான அழுத்தத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு கேஸ் சிலிண்டருக்குள் எரிவாயுவானது ஒரு சதுர சென்டி மீட்டருக்கு ஐந்து முதல் ஏழு வரையிலான அழுத்தத்துடனேயே பராமரிக்கப்படுகிறது. 

ஆனால் மக்கள் இந்த கேஸ் சிலிண்டரை தூக்கி எறிவது, வெப்பப்படுத்துவது போன்ற பாதுகாப்பற்ற முறைகளை கையாளும்போது கேஸ் சிலிண்டர் ஒரு வெடி அணுகுண்டாக மாறுகிறது. ஆகவே கேஸ் சிலிண்டர்களை கையாளும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம். 

பாராசூட் தயாரிக்க பட்டு இழைகள் உதவுகின்றன ஏன்?

பட்டு ஓர் வலிமையான இயற்கை இழையாகும்.

இவை மெல்லிய எடை குறைந்த மற்றும் எளிதில் தீப்பிடிக்காத தன்மை கொண்டதினால் இவை அதிகம் பாராசூட் தயாரிப்பில் உதவுகின்றன.
மீன்களால் எவ்வாறு நீரின் மேலும், கீழும் நீந்த முடிகிறது?

மீனானது தனது செவுள்கள் மூலமாக சுற்றியுள்ள நீரில் இருக்கும் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு அதன் காற்றுப்பையை நிரப்புகிறது. இந்நிகழ்வினால் மீனுடைய உடலின் அடர்த்தியானது குறைக்கப்படுகிறது.

மிதப்பு விசை மற்றும் புவியீர்ப்பு முடுக்கமானது ஒன்றுக்கொன்று எதிராக செயல்படுவதால் மீனினால் தொடர்ந்து அதே நிலையில் இருக்க முடிகிறது.

பெரும்பாலான மீன்கள் இந்த முறையினை பயன்படுத்தியே நீரின் மேலும், கீழும் நீந்துகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why gas Cylinder bomb


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal