வாழைப்பழத்தில் சுவையான பாயசம்... அருமையாக செய்வது எப்படி.?!
Vaazhaipazham Payasam in tamil
கடைகளில் பெரும்பாலும் சுபலமாக கிடைக்கும் பழங்களில் வாழைப்பழம் முதல் இடத்தை பிடிக்கிறது. வாழைபழத்தை வெறுமன சாப்பிடுவது போலவே சுவையான உணவுகளை செய்து சாப்பிடலாம். தற்போது வாழைப்பழத்தில் சுவையான பாயாசம் எப்படி செய்வது என பார்போம்.
தேவையானவை:
பழுத்த மலை வாழைப்பழம் - 4
சர்க்கரை - 100 கிராம்
முற்றிய தேங்காய் - 1
ஏலக்காய் - தேவையான அளவு
முந்திரிப் பருப்பு - 25 கிராம்
பேரிச்சம் பழம் - 6
செய்முறை:
வாழைப்பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். முந்திரிப் பருப்பு, பேரிச்சம் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
தேங்காய் பாலில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து அதனுடன் வாழைப்பழம் முந்திரி, பேரீச்சம் பழம் ஆகியவற்றை சேர்த்து அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
இதனை குளிரவைத்து சிறிது நேரம் கழித்து எடுத்தால் சுவையான வாழைபழ பாயாசம் தயார்.
English Summary
Vaazhaipazham Payasam in tamil