இயற்கை முறையில் உடல் எடையைக் குறைக்கலாமா? - டிப்ஸ் இதோ.!
tips of weight loss
இந்தக் காலத்தில் உடல் எடையை குறைப்பது என்பது சவாலான ஒன்றாக மாறிவிட்டது. உணவு கட்டுப்பாடு இல்லாதது இதற்கு முக்கிய காரணம். பலரும் ஏறிய எடையை குறைக்க பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இயற்கை முறையை தேடி வருகின்றனர். அதில் சில முறையை இந்தப் பதிவில் காண்போம்.
* வெந்தயம்:-
உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்கள் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம். இது உடல் எடையைக் குறைப்பதுடன் நீரிழிவு நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது.
* துளசி இலை :
இயற்கையாகவே டிடாக்ஸ் செய்யும் பண்புகளை கொண்ட துளசி இலை, உடலில் உள்ள கொழுப்பை குறைத்து, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. வெறும் வயிற்றில் 3-5 துளசி இலைகளை மென்று சாப்பிட வேண்டும். இதனால் குடல் சுத்தமாக இருப்பது மட்டும் இல்லாமல், உடல் சோர்வை நீக்கும். .
* பாதாம்:-
இது உடலில் உள்ள கொழுப்பை ஆற்றலாக மாற்றுவதனால் கொழுப்பு குறைகிறது. இதற்கு இரவில், 5-7 பாதாம்களை தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் தோலை நீக்கி மென்று சாப்பிடுங்கள். இதனால் பசி உணர்வே இருக்காது.