அதிவேகம் வேண்டாம்... ஆபத்தை தரும்... சிறு அலட்சியம்... உயிரை பறிக்கும்.! - Seithipunal
Seithipunal


நாளுக்கு நாள் வாகனத்தின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாகனத்தை பயன்படுத்துகின்றனர்.

வாகனத்தின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இன்றைய சூழலில் வாகனத்தை ஓட்டும்போது மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

விபத்துக்கள் நடைபெறுவதற்கான காரணங்கள் :

அதிக வேகம்

செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குவது

சாலை விதிகள், சிக்னல்களை மதிக்காமல் செல்வது

தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்குவது

அலட்சியம் மற்றும் அவசரமாக வாகனத்தை இயக்குவது

மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவது

சைகைகள் காண்பிக்காமல் வாகனத்தை திருப்புவது

வாகனத்தில் அதிக பாரத்தை ஏற்றுவது

முன் செல்லும் வாகனத்தின் பின் செல்லும்போது போதிய இடைவெளி இல்லாமல் செல்வது

வளைவுகளில் முந்திச்செல்வது

வாகனம் எதிரில் வரும்போது முன் செல்லும் வாகனத்தை முந்திச்செல்வது

இதுபோன்ற பல தவறுகளால் விபத்துக்கள் நடைபெறுகின்றன.

விபத்துக்களை தடுக்க :

அதிவேகமாக வாகனத்தை இயக்குவதை தவிர்க்க வேண்டும்.

இரு சக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்களில் செல்வோர் கட்டாயமாக சீட்பெல்ட் அணிவது அவசியம்.

மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தலைகவசம் அணிவது அவசியம்.

நான்கு வழி சாலையில் வாகனங்களை இடதுபக்க பாதையில் ஓட்டிச்செல்வது மிகவும் பாதுகாப்பாக அமையும்.

வாகனத்திற்கு பின் செல்லும்போது இடைவெளிவிட்டு செல்ல வேண்டும்.

தூக்க கலக்கத்தில் வாகனத்தை ஓட்டாதீர்கள். உடல் சோர்வாகவோ, தூக்கம் வருவதாகவோ நீங்கள் உணர்ந்தால், உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுங்கள்.

அதிக சப்தமாக பாடல்களைக் கேட்டு கொண்டே செல்லாதீர்கள். ஏனெனில், பிற வாகனங்கள் கொடுக்கும் எச்சரிக்கை ஒலிகளை உங்களால் கேட்க இயலாது.

வாகன ஓட்டுநர்கள் சாலையின் இடது புறத்திலேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும்.

குறுக்குச்சாலை அல்லது பாதசாரிகள் கடக்கும் இடங்களில் வாகனத்தின் வேகத்தைக் குறைத்துச் செல்ல வேண்டும்.

போக்குவரத்து விளக்குகளில் சிவப்பு விளக்கு எரிந்தால் நில், செல்லாதே என்றும், மஞ்சள் விளக்கு எரிந்தால் சாலையைக் கடக்கத் தயாராக இரு என்றும், பச்சை விளக்கு எரிந்தால் செல் என்றும் அறிவிக்கின்றது. இதை பின்பற்றுவது அவசியம். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

road awareness 2


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->