காரமணியில் வடையா? - எப்படி செய்வது?
recipe of karamani vadai
காரமணியில் வடையா? - எப்படி செய்வது?
இதுவரைக்கும், மசால் வடை, மெதுவடை, தவளை வடை, கீரை வடை, பாசிப்பயறு வடை என்றுதான் பார்த்திருப்போம் . ஆனால், புதிதாக காரமணி வடை செய்வது குறித்து இந்த பதில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
காராமணி, வரமிளகாய், சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, துருவிய தேங்காய், பெருங்காயத் தூள், உப்பு, எண்ணெய்

செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் காராமணியை போட்டு ஐந்து நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின்னர் அதனை கழுவி, அதனுடன் வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு அதனுடன் தண்ணீர் சேர்க்காமல் கரகரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு, அதனை ஒரு கப்பில் போட்டு, அதில் பெருங்காயத் தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் துருவிய தேங்காய் உள்ளிட்டவை சேர்த்து கறிவேப்பிலையும் சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும்.
அதன் பின்னர் ஒரு வானலை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், பிசைந்து வைத்துள்ள கலவையை உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான காராமணி வடை தயார்.