கேரளா ஸ்டைலில் முட்டை கிரேவி - இதோ உங்களுக்காக.!! - Seithipunal
Seithipunal


கேரளா ஸ்டைலில் முட்டை கிரேவி - இதோ உங்களுக்காக.!!

முட்டைக்குழம்பு பல வகையாகச் செய்யலாம். செட்டி நாடு வறுத்த முட்டைக் குழம்பு, உடைத்து விட்ட முட்டைக் குழம்பு, அவித்த முட்டைக் குழம்பு என பலவகையான முட்டைக் குழம்புகள் உள்ளன. 

இதில் கேரள ஸ்டைல் முட்டைக் குழம்பு இட்லி, ஆப்பம், தோசைக்கு ஏற்றவகையில் செய்வார்கள். அதிக காரம் இருக்காது. கேரள ஸ்டைல் முட்டைக் குழம்பு பச்சை மிளகாய், கொத்தமல்லி ஃபிளேவர் தக்காளி பியூரியில் சமைக்கப்படும்.

தேவையான பொருள்கள்:-

நெய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தக்காளி, உப்பு, வினிகர், சர்க்கரை, முட்டைகள்

செய்முறை:

முதலில் ஒரு வாணலில் நெய்யை ஊற்றி சூடானதும், மெலிதாக வெட்டிய வெங்காயத்தைப் பொன்னிறமாகும் வரை வதக்கி பூண்டு மற்றும் இஞ்சியை விழுதாக அரைத்து வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் கொத்தமல்லி இலைகள், தூளாக்கிய மசாலா மற்றும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, சில நிமிடங்கள் வரை வதக்கி தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வினிகர் மற்றும் சர்க்கரையை சேர்க்கவும்.

இந்த கலவையில், நான்கு குழிகளை இட்டு அதில் ஒவ்வொன்றிலும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும். முட்டை வெந்தவுடன் அடுப்பை அணைத்து பின்னர் பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

recipe of egg grevy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->