சீயக்காய், அரப்பு போட்டு குளிப்பது கூந்தல் வளர மட்டுமல்ல.! கொசுவை ஒழிக்க..!
reason for using seeyakkai, arappu for hair
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தான் என்றால், அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி,கொடிகளுக்கு பயன்படும்.
ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும் பொழுது தண்ணீர் அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது.
துணி துவைக்க வேப்பங்கொட்டையில் செய்த சோப்பை பயன்படுத்தினால் தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து சோப்பு அழுக்கை திண்ணும்.
சீயக்காய், அரப்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி தலைக்கு குளிக்கும் பொழுது அந்த அழுக்கை உண்ண மீன்கள் ஓடிவரும்.
பாத்திரம் கழுவ இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில் சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன.

ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை அந்த தவளைகள் உண்டு மனிதனை காய்ச்சல் போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றின .
ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் .இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை.
அதனால் தான் டெங்கு காய்ச்சல் மனிதனைக் கொல்கிறது .முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற வகையில் செயல்பட வேண்டும்.
இன்றைய மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அவன் இயற்கையை மறந்து செயற்கைக்கு மாறியதே
இயற்கை மனிதனை வாழவைக்கும் , செயற்கை அவர்களைக் கொன்றழிக்கும். அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..!
English Summary
reason for using seeyakkai, arappu for hair