தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாததற்கு காரணம்.! தெரிந்து கொள்வோம்.! - Seithipunal
Seithipunal


தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது என்பது அனைவர்க்கும் தெரிந்தது தான். ஆனால் என் ஒட்டாது என்பதற்கு காரணம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அதற்கான காரணத்தை இன்று பார்க்கலாம்.

மிகவும் கடுமையாக மழை பெய்தாலும், குளத்தில் எவ்வளவுதான் தண்ணீர் இருந்தாலும், அதில் மிதந்து கொண்டு தான் இருக்கும் மேலும் தாமரையின் இலை மீது தண்ணீர் ஒட்டாது. 

தாமரை இலையின் மேற்பரப்பை ஒரு மைக்ரோஸ்கோப் கீழ் வைத்துப் பார்த்தால் அதில் நிறைய நுண்ணிய மேடுகள் இருப்பது தெரியும். மெழுகுபோன்ற படிகங்கள் இவற்றை மூடியிருப்பதையும் நம்மால் பார்க்க முடியும். 

தாமரை இலைமீது நீர்த்துளிகள் விழும்போது முதலில் அவை இந்த நுண்ணிய மேடுகள் மேல்தான் படும். இந்த மேடுகள் இலைமீது நீர் படாதவாறு பாதுகாக்கின்றன. நீர்த்துளிகள் இலைகளைத் தொடாமல் இருப்பதற்கு இலையின் வடிவமும் ஒரு காரணம். 

பொதுவாகவே தாமரை இலைகளின் ஓரம் சரிந்திருப்பதால் அதன்மீது நீர்த்துளிகள் விழுந்தவுடன் அவை சரிந்து கீழே விழுந்துவிடுகின்றன. அதனால்தான் தாமரை இலை நனையாமல் இருக்கிறது. 

அதோடு, உருண்டு ஓடும் நீர்த்துளிகள் அழுக்கையும் மண் துகள்களையும் எடுத்துச் செல்வதால் இலை சுத்தமாகவும் இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reason for lack of water in the lotus leaf


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal