கேழ்வரகு இனிப்பு அடை... குழந்தைகளுக்கு ஏற்ற ஹெல்தியான உணவு...! - Seithipunal
Seithipunal


கேழ்வரகு இனிப்பு அடை
தேவையானப் பொருட்கள் :
பொருள்                                 - அளவு
கேழ்வரகு மாவு                        2 கப்
வெல்லம்                                    1 கப்
தேங்காய் துருவல்                 அரை கப்
ஏலக்காய்த்தூள்                     அரை டீஸ்பூன்
பொடித்த முந்திரி                     2 டேபிள்ஸ்பூன் (நெய்யில் வறுத்தது)
நெய்                                                தேவையான அளவு
தண்ணீர்                                       தேவையான அளவு


செய்முறை :
முதலில் வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிட வேண்டும். பின்னர் வெல்லக் கரைசல் சற்று கெட்டியானதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும். பிறகு கேழ்வரகு மாவு, ஏலக்காய்த்தூள், பொடித்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும். கடைசியாக வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டி வைத்த அடைகளைப் போட்டு, சுற்றிலும் சிறிது நெய் விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், சத்து நிறைந்த கேழ்வரகு இனிப்பு அடை தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ragi inippu adai a healthy food suitable for children


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->