சுவையான சூப்பரான அன்னாசி பழ புட்டிங்.! பாக்கும் போதே சுவைக்க தூண்டுதே.!
pineapple putting vary tasty preparation
தேவையான பொருட்கள் :
அன்னாசிப்பழம் - 2
கஸ்டர்ட் பவுடர் - 4 ஸ்பூன்
பால்பவுடர் - 1/2 ஸ்பூன்
சர்க்கரை - 1/2 ஸ்பூன்
பொடித்த முந்திரிப்பழம்+முந்திரிப்பருப்பு - 1/2 கப்
அன்னாசி எஸன்ஸ் - 1/2 ஸ்பூன்
செய்முறை :
முதலில் அன்னாசிப்பழத்தின் தோலை சீவி விட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
பிறகு கஸ்டர்ட் பவுடரினுள் தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து அதனுள் சர்க்கரை சேர்த்து கிரைண்டரில் போட்டு நன்கு அரைக்கவும்.
பின்னர் அத்துடன் பால்பவுடர் சேர்த்து அடிக்கவும். இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, பொடித்த முந்திரிப்பழம் மற்றும் முந்திரிப்பருப்பு, அன்னாசி எஸன்ஸ் ஆகியவற்றைப் போட்டு கலக்கி சிறிதளவு எடுத்து ஒரு உருண்டையான கிண்ணத்தில் ஊற்றி, அதன் மேல் அன்னாசி துண்டுகளாகப் போட்டு 10 நிமிடங்கள் பேக் செய்யவும். சுவையான அன்னாசி புடிங் தயார்.
English Summary
pineapple putting vary tasty preparation