ஒரு குடும்பமே தற்கொலை செய்த சோகம்! - Seithipunal
Seithipunal


 நிலம் மற்றும் வீட்டின் உரிமை தொடர்பான பிரச்சினை காரணமாக ராஜஸ்தானில் ஒரு குடும்பமே தண்ணீர் டேங்கில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில்,பார்மர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி  சிவ்லால் மேக்வால் மற்றும்  கவிதா ,இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.சம்பவத்தன்று செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகில் இருந்த தண்ணீர் டேங்கில் 4 பேரும் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.இதையடுத்து தகவலின் பேரில் போலீசார்  புதன்கிழமை அதிகாலையில் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும்  தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ,தற்கொலை செய்யும்முன்னர் கவிதா தனது இளைய மகன் ராமதேவ்க்கு பெண்களின் உடையை அணிவித்து, அவனது தலையில் துப்பட்டாவை போர்த்தி, அவன் கண்களில் காஜல் மை பூசி, தனது தங்க நகைகளை அவனுக்கு அணிவித்து அழகு பார்த்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் வீட்டில் இருந்து சிவ்லால் எழுதிய தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டுள்ளது. அதில் மூன்று பேர் குடும்பத்தின் இந்த முடிவுக்கு காரணம் என்றும், அதில் சிவ்லாலின் இளைய சகோதரரும் ஒருவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.நிலம் மற்றும் வீட்டின் உரிமை தொடர்பாக பல ஆண்டுகளாக நடந்த சண்டைகளே தற்கொலைக்குக் காரணம் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தனி வீடு கட்ட சிவ்லால் விரும்பியதாகவும், இதற்கு அவரது தாயும் சகோதரரும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் .இதனால் சம்பவத்தன்று குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் வெளியே இருந்த நிலையில், சிவ்லால் மற்றும் கவிதா தங்களது தொலைபேசிகளை அணைத்துவிட்டு இந்த முடிவை எடுத்துள்ளனர் என தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறை இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The tragedy of a whole family committing suicide


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->