தொடர்ந்து ஏறும் தங்கம் விலை...! கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்த சோகம்!
Gold prices continue to rise Sadness as it rises by Rs 40 per gram
உலக பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இதில் பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதைத்தொடர்ந்து நேற்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,520-க்கு விற்பனையானது.இந்நிலையில், 3 -வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,105 க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840 க்கும் விற்பனையாகிறது.

மேலும் கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.121 க்கும் கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
02-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,520
01-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160
30-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,320
29-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440
28-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440
கடைசி 5 நாள் வெள்ளி விலை நிலவரம்:
02-07-2025- ஒரு கிராம் ரூ.120
01-07-2025- ஒரு கிராம் ரூ.120
30-06-2025- ஒரு கிராம் ரூ.119
29-06-2025- ஒரு கிராம் ரூ.119
28-06-2025- ஒரு கிராம் ரூ.119
English Summary
Gold prices continue to rise Sadness as it rises by Rs 40 per gram