அவர்களை தூண்டியவர்கள் யார்? இதுவே தமிழக சட்ட ஒழுங்கின் நிலை - டாக்டர் இராமதாஸ்!
PMK Ramadoss say about Thirupuvanam ajithukumar case
பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் மருத்துவர் இராமதாஸ், தைலாபுரம் தோட்டத்தில் இன்று நிருபர்களை சந்தித்து தெரிவிக்கையில், "தமிழக அரசு அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்தும் புதிய திட்டத்தை பாராட்டி, இது ஒரு நேர்த்தியான முயற்சி. மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்" என்றார்.
மேலும், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொடங்கிய நிலையில் உரம் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். "இது அபாயகரமான நிலை. அரசு உடனடியாக தலையீடு செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.
திருப்புவனத்தில் போலீசாரின் தாக்குதலால் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர், "அந்த குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடும், ஒருவருக்கு அரசுத் துறை வேலை வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். நகை திருட்டுக்குக் காரணமாக கூறப்படும் நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்குகள் உள்ளன.
அஜித்குமாரை அடித்து கொலை செய்த போலீசாரை கைது செய்துள்ளனர். ஆனால் அவர்களை தூண்டியவர்கள் யார்? பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் உத்தரவை தொடர்ந்து இந்த மரணம் நிகழ்ந்தது. இதுவே தமிழக சட்ட ஒழுங்கின் நிலையைக் காட்டுகிறது" என குற்றம்சாட்டினார்.
பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது என்றும், அரசு அனுமதி வழங்கும் முறையில் கடுமையான கட்டுப்பாடுகள் அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மழைக்காலத்தில் சாலை பராமரிப்பு மிக மோசமாக இருப்பதாகவும், குறிப்பாக சென்னை நகரில் மேம்பாலம் மற்றும் மெட்ரோ பணிகளால் சாலைகள் அடையாளம் தெரியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
English Summary
PMK Ramadoss say about Thirupuvanam ajithukumar case