சாவுக்கு மனைவி காரணம்.. எழுதி வைத்து விட்டு வாலிபர் தற்கொலை! - Seithipunal
Seithipunal


 தனது சாவுக்கு மனைவி லட்சுமி தான் காரணம் என்று எழுதி வைத்து விட்டு தனியார் பாதுகாப்பு நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பீனியா பகுதியை சேர்த்தவர்  மல்லேஷ். இவர் தனது மனைவியுடன் அதேபகுதியில் வசித்துவந்தனர். கடந்த 6 ஆண்டுக்கு முன்பு இந்த தம்பதிக்கு திருமணம் நடந்தது. கணவர் மல்லேஷ் சொந்தமாக தனியார் பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வந்தார்.

இந்தநிலையில் இந்த தம்பதி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது . அதுபோல், நேற்று முன்தினமும் அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை சண்டை ஏற்பட்டு  இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு கணவர் மல்லேஷ் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பீனியா போலீசார் விரைந்து சென்று மல்லேசின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது படுக்கை அறை சுவரில் தனது சாவுக்கு மனைவி லட்சுமி தான் காரணம், அவர் கொடுத்த தொல்லையே காரணம் என்றும் மல்லேஷ் எழுதி இருந்தார்.இந்தநிலையில் தனது நடத்தையில் சந்தேகப்பட்டு மல்லேஷ் சண்டை போட்டதாக மனைவி லட்சுமி கூறியுள்ளார். 

அதனை தொடர்ந்து லட்சுமி எதற்காக தொல்லை கொடுத்தார்? என்ற மற்ற தகவல்கள் தெரியவில்லை. இதுகுறித்து பீனியா போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The reason for the death is the wife A young man committed suicide after writing it down


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->