வயிற்றுப்புண் சரியாக இந்த மாதிரி தேங்காய்பால் கஞ்சி செஞ்சி சாப்பிடுங்க!
Kanji For Ulcer problem in Tamil
தேங்காய்ப்பால் வயிற்றுப்புண்ணுக்கு அளப்பரியா மருந்தாகும். வயிற்றுப்புண்ணால் எதுவுமே சாப்பிட முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு இரண்டு மூன்று நாள்கள் தொடர்ந்து இந்த சுவையான தேங்காய் பால் கஞ்சியைக் கொடுப்பதன் மூலம் முழுமையாக குணமடைகிறது.
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
தண்ணீர் - 2 கப்
தேங்காய் - 1
பூண்டு - 5 பல்
வெந்தையம் - 1 1/2 டேபில் ஸ்பூன்

செய்முறை:
அரிசி, பூண்டு, வெந்தையம், தண்ணீர், இரண்டாம் தேங்காய் பால் 1 கப் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை குக்கரில் வேகவிடவும்.
அரிசி வெந்ததும் சற்று கரண்டியை வைத்து நன்றாக மசித்து விடவும், மசித்தப்பின் முதலாம் தேங்காய் பாலை சேர்த்து உப்பு அல்லது விருப்பமான இனிப்புச் சேர்த்து கிளறி விட்டு கொதிப்பதற்கு முன்னால் அடுப்பை அணைத்து விடவும். காலை உணவாக சாப்பிட்டால் விரைவாக வயிற்றுப் புண், உடல் சூடு போன்றவற்றுக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்.
தேங்காய் பால் கஞ்சிக்கு, தேங்காய் துவையல் பெஸ்ட் காம்போவாக இருக்கும். குழந்தைகளும் மிகவும் விரும்பி உண்ணுவார்கள்.
English Summary
Kanji For Ulcer problem in Tamil