கறடிக்கும் ஜோக்ஸ்.! கொஞ்சம் சிரிங்க பாஸ்.!  - Seithipunal
Seithipunal


ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களையும் அடக்கினால் என்ன ஆகும்?
மாணவன் : ஆம்புலன்ஸ் வரும் சார்..
ஆசிரியர் :????

அமலா : நேத்து என் வீட்டுக்கு திருட வந்தவன் ரொம்ப நல்லவன்.
விமலா : எதவெச்சு சொல்ற?
அமலா : பீரோ சாவிய கொடுக்க மாட்டேன்னு சொன்ன என் மாமியார அடி பின்னிட்டானே.
விமலா : ??????

மேனேஜர் : இந்த ஆபிசுக்கு நான் மேனேஜரா? இல்ல நீ மேனேஜரா?
குமார் : நீங்க கோபப்படுற அளவுக்கு நான் எந்த தப்பும் செய்யலையே சார்?
மேனேஜர் : அட அதில்லையா.. கொஞ்ச நாளா எனக்கு ஞாபக மறதியா இருக்கு. அதான் கேட்டேன்..!
குமார் : ???

சுகர் இப்படியும் குறையுமா?


இரண்டு கிலோமீட்டர் நடந்து போயி ரேஷன் கடையில ஒரு கிலோ சர்க்கரை வாங்கினேன்..
ஒரு கிலோமீட்டர் திரும்பி வரும்போது, எனக்கு தெரிந்த கடையில் எடைக்கல்லில் சர்க்கரையை நிறுத்திப் பார்த்தேன். 200கிராம் கம்மியா இருந்தது. கடைக்காரரிடம் விசாரித்தேன்.
அவர் சொன்னதை கேட்டு எனக்கு ப்ரசர் ஏறிடுச்சு...
ஏறுன ப்ரசர் குறையல...

கடைக்காரர் சொன்னது : 

நீங்க ஒரு கிலோமீட்டர் நடந்து வந்துருக்கீங்க...
நடந்தா சுகர் குறையும்னு உங்களுக்கு தெரியாதா? சிரிப்போம் சந்தோஷமாக வாழுவோம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jokes in tamil


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->