தோனி கையில் உலகக்கோப்பையை தூக்கி கொடுத்த இந்திய வீரர், போலீஸ்காரராக கொரோனா தடுப்பு பணியில்! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜோஹிந்தர் சர்மா காவல்துறையில் பணியாற்றி வருவது அனைவரும் அறிந்தது. தற்பொழுது அவர் உலகமே பாதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் எதிர்ப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அந்த போட்டோக்களை அவர் வெளியிட்டுள்ளார். 

கடந்த 2007 ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. அனுபவமில்லாத கத்துக்குட்டி அணியான இந்திய அணி கோப்பையை வெல்லும் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை. சச்சின் கங்குலி டிராவிட் என முன்னணி வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி தோனி தலைமையில் மிக சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

இறுதிப் போட்டியில் இறுதி ஓவரை வீசிய ஜோஹிந்தர் சர்மா, பாகிஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த மிஸ்பா உல் ஹக்கை ஆட்டமிழக்கச் செய்து, இந்திய அணி உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தது யாராலும் மறக்க முடியாது. துரதிஷ்டவசமாக இந்திய அணிக்காக அவர் விளையாடிய கடைசி போட்டியும் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன் பிறகு காவல் துறையில் பணியில் இருக்கும் ஜோஹிந்தர் ஷர்மா தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயலாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதனை கௌரவப்படுத்தி ஐசிசி இதனுடைய பக்கத்தில் 2020 ரியல் வேர்ல்டு ஹீரோ என புகழாரம் சூட்டியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Joginder Sharma working as a policeman


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->