உப்பை பயன்படுத்தி.. ஒப்பற்ற அழகை பெறுவது எப்படி.?!  - Seithipunal
Seithipunal


உப்பு என்றால் பொதுவாக சமையலுக்கு பயன்படும் என நினைத்து கொள்வோம். ஆனால் இந்த உப்பை நாம் அழகிற்காக பயன்படுத்தலாம். ஆம் கருப்பு உப்பு என சொல்லப்படும்  ஒருவகை உப்பை நம் சரும அழகிற்காக பயன்படுத்தலாம்.

கருப்பு உப்புடன் தேனை பயன்படுத்துவது நமது சருமத்தை பளபளப்பாக்கும். இதனைஎப்படி செய்வது என பார்ப்போம்.

இரண்டு டீஸ்பூன் தேனுடன் அரை டீஸ்பூன் கருப்பு உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்பு அந்த பேஸ்டை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். 

இப்படி செய்வதால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி முகத்தை பொலிவு பெற செய்யும்.

வறண்ட சருமம் கொண்டவர்கள் பாதம் எண்ணெயுடன் கருப்பு உப்பை பயன்படுத்துவது நல்ல பலனை தரும். மூன்று டீஸ்பூன் பாதாம் எண்ணெய்யுடன் ஒரு டீஸ்பூன் கருப்பு உப்பை கலந்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். 

அதுமட்டுமின்றி எலுமிச்சை சாறுடன் கருப்பு உப்பை பயன்படுத்துவது சருமத்தை மென்மையாக்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to use black salt beauty tips


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->