அடிவயிற்று தொப்பையை குறைக்க வேண்டுமா.? இதோ எளிய வழிகள்.!
How to reduce bellyfat
தற்போதைய காலகட்டத்தில் உடல் பருமன் அதிகரித்து தொப்பை எளிதாக வந்து விடுகிறது. அதற்கு காரணம் நாம் உண்ணும் உணவு தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதில் சிலர் தங்களது தொப்பையை குறைக்க உணவுப் பழக்கத்தை மாற்றினாலும், கடினமாக உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடையை குறைக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
அந்த வகையில் அடி வயிற்று தொப்பையை எவ்வாறு எளிதாக குறைக்கலாம் என்பதை நாம் இந்த பதிவில் காணலாம். அதன்படி சில மருத்துவ குணம் உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் தொப்பையை குறைக்க முடியும்.
சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து குடிப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கிறது.
எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து தண்ணீர் கலந்து குடித்து வர தொப்பை குறைய நல்ல மருந்தாக பயன்படுகிறது.

காலையில் பிளாக் டீ குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து தொப்பை குறைக்க உதவுகிறது.
கேரட், பீட்ரூட் மற்றும் பாகற்காய் கலந்து காய்கறி சூப் செய்து சாப்பிட்டால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம் .
உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுவதில் கிரீன் டீக்கு முக்கிய உதவி செய்கிறது.
கற்றாழையை சாறு பிழிந்து தண்ணீர் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறைக்க நல்ல பலன் கிடைக்கிறது.